பேருந்து வரும் நேரத்தை துல்லியமாக தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை திறப்பு.

பேருந்து வரும் நேரத்தை துல்லியமாக தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை திறப்பு.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட திருவானைக்கோவில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்கு பேருந்து வரும் நேரத்தை துல்லியமாக தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து வருகை நேர விவரம் குறித்த அறிவிப்பு பலகையை (Real Time Bus Tracking System Display Board) பயணிகள் பயன்பாட்டிற்காக இன்று (24.01.2025) நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் முயற்சியால் பேருந்து கண்காணிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியை கண்காணித்து மேற்கொள்ள உதவி ஆட்சியர் பயிற்சி அமித்குப்தா, மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததன் பேரில் கிவிஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி, போக்குவரத்து,

மின்சார வாரியம், நெடுஞ்சாலைகள், ஆர்டிஓ மற்றும் பஞ்சாயத்துத் தலைவர்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டத்தை இன்று (24.01.2025) நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கண்காணிப்பு அமைப்பின் முன்னோடித் திட்டத்தை திருவானைக்கோவில் பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து வருகை நேர விவரம் குறித்த அறிவிப்பு பலகையை தொடங்கி வைத்தார்.

இந்த முன்னோடித் திட்டம் தற்போது திருச்சியில் உள்ள 5 பேருந்து நிறுத்தங்களில் செயல்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 42 அரசு பேருந்துகளில் ஜிபிஎஸ் கண்காணிப்பு கருவிகள் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. திருவானைக் கோவிலில் இருந்து சமயபுரம் வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட பைலட் பாதையில் சோதனைக்காக இவை இணைக்கப்பட்டுள்ளன.

பைலட் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகள், பைலட் பேருந்து நிறுத்தங்களில் நிறுவப்பட்ட காட்சிப் பலகைகளில் பேருந்து எண், காத்திருப்பு நேரம் மற்றும் சேருமிடம் ஆகியவற்றைக் காணலாம். இது அவர்களின் அன்றாட பயணத்தை எளிதாக்க உதவும்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, நகரப் பொறியாளர் சிவபாதம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் (வணிகம்) சுரேஷ்குமார் கோட்ட மேலாளர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision