சிலம்பம், தீ பந்தம் சுழற்றிய திருச்சி டிஐஜி!!
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் பயிற்சி காவலர்களுக்கும் ஆயதப்படை காவலர்களுக்கும் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கும் “PRO-ACTIVE POLICING” (செயல்திறன் மிக்க காவலர்கள்)” உருவாக்கும் நோக்கில் சிலம்பம், கராத்தே மற்றும் மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய பயிற்சிகள் நடந்தபட்டது.
Advertisement
இப்பயிற்சியில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் காவல்துறை துணைத்தலைவர் ஆனிவிஜயா சிலம்பம் மற்றும் கராத்தே பயிற்சி செய்து காண்பித்து காவலர்களை உற்சாகப்படுத்தினர்கள்.
குச்சியில் தீபந்தம் ஏற்றிய சுழற்றுவது,சுருள் கம்பியில் மூலம் தற்காப்பு பயிற்சி நேரடியாக அவரே பயிற்சியாளருடன் செய்து வியப்பில் ஆழ்த்தினார்.
மேலும் காவலர்களுக்கும் பயிற்சி அளிக்கபட்டது. இப்பயிற்சி காவலர்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஊக்கமளிக்கவும் மேலும் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறுவு ஏற்படுத்த இப்பயிற்சிகள் நடத்தபடுவதாக டிஐஜி தெரிவித்தார்.
Advertisement