முசிறி மற்றும் லால்குடி  நகராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று வெளியீடு

முசிறி மற்றும் லால்குடி  நகராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று வெளியீடு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட லால்குடி மற்றும் முசிறி நகராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இன்று (04.01.2022) வெளியிட்டார். லால்குடி நகராட்சியின் மொத்த வாக்காளர்கள் 20328 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 9877 பேர் பெண்கள் வாக்காளர்கள் 1046 பேர் மற்றும் இதரர் 5. மொத்த வார்டுகள் 24 நகராட்சியில் 24 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முசிறி நகராட்சியின் மொத்த வாக்காளர்கள் 27023 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 12912 பேர். பெண் வாக்காளர்கள் 14098 பேர் மற்றும் இதரர் 13 பேர் ஆகும். மொத்தம் உள்ள 24 வாக்குச்சாவடிகளில் 33 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் 9 வாக்குச்சாவடிகள் பெண்கள் 9 வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் 15 ஆகும்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) செ.சு.வி.ஆ மகாலிங்கம், நகராட்சி ஆணையர்கள் வை.குமார் (லால்குடி ) சி.மனோகரன்(முசிறி ) ஆகியோர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn