திருச்சி அருகே ஒரு வேடந்தாங்கல் நெஞ்சை கொள்ளை கொள்ளும் பறவைகள்

திருச்சி அருகே ஒரு வேடந்தாங்கல் நெஞ்சை கொள்ளை கொள்ளும் பறவைகள்

மனிதனின் மனசை இலகுவாக்குவதில் மரங்களும், பறவைகளும் முக்கிய பங்காற்றுகின்றன என்றால் அது மிகையாகாது. கடல் போல் காட்சியளிக்கும் ஏரி, எட்டிய தூரம்வரை கண்ணை விட்டு அகலாத தண்ணீர், கரைகளுக்கு பாதுகாப்பாக உயர்ந்து நிற்கும் மரங்கள், ஏரிக்கு நடுவே கூட்டமாக வட்டமிடும் பறவைகள் என பரவசங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் உள்ளடக்கி அனைவரின் மனங்களையும் கொள்ளையடிக்கும் வகையில் மாற்றிவருகிறது திருச்சியில் முக்கிய ஏரிகளில் வலசைப்பறவைகளின் வருகை..

தொடர்ந்து  நல்ல பருவ மழை விளைவாக காவிரி ஆற்றில் அதிக நீரோட்டம் மற்றும் பல ஏரி குளங்கள் நிரம்பின. 2021ஆம் ஆண்டில் பெய்த தொடர்  பருவ மழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து மற்றும்  ஏரி குளங்கள் நிரம்பியதால் வலசைப் பறவைகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
 

திருவாரூர் வடுவூர் பறவைகள் சரணாலயம், நாகப்பட்டினம் கோடியக்கரை சரணாலயம், அரியலூர் கரைவேட்டி சரணாலயங்கள் அக்டோபர் மற்றும் ஜனவரி இடையே வலசைப் பறவைகளின் வருகை ஆயிரக்கணக்கில் வரும்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரி குளங்களில் நீர் நிரம்பியதால்வவலசை  பறவைகள் இங்கு திருச்சியிலும் பார்த்திட முடிகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கும்  பறவைகளைப் பார்வையிட விரும்பும் அனைத்து மக்களுக்கும் ஒரு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் திருச்சி காவேரி மாநகரிலும் இந்த பறவைகளின் வருகை மேலும் அழகூட்டுகிறது இதுகுறித்து பறவை ஆர்வலர் என் தங்கமணி கூறுகையில்,கூத்தப்பர் குளம் நீர்ப்பறவைகள் மத்தியில் மிகவும் பிரபலம் சில வருடங்களுக்கு முன்பு இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட நூறு வகையான வலசை பறவைகளை அப்பகுதியில் பார்க்கலாம்.

கிளியூர் குளம், மாவடிகுளம், மணிகண்டம் குளம் ஆகியவற்றிலும் இன்றைக்கும் நீர் பறவைகளின் வருகை அதிகரிக்கிறது. டார்டர், பெலிகன், நார்தர்ன் பின்டெயில் ஸ்ட்ரோக்ஸ், ஸ்பூன்பீல்டு மற்றும் ஜக்கானா ஆகியவை இந்த சீசனில் பிரபலமான பறவைகள் ஆகும். இடம்பெயர்ந்த பறவைகள் வாத்துகளும் மடங்கும் பறவை களின் வருகையால் வேட்டையாடுதல் குறையும்.

குறிப்பாக கிளியூர் குளம் பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுகின்றது இப்பகுதியில் இந்த வலசைப் பறவைகளின் வருகையால் ஒரு நாளுக்கு 2 டன் கழிவுகள் கிடைக்கின்றன இது மிக சிறந்த இயற்கை உரம்.பறவைகள் தங்களது நலனுக்காக வலசை போனாலும் இதனால் மகரந்தச் சேர்க்கை கழிவுகளால் மண் வளம் பெருக தடுப்பூசிகளின் எண்ணிக்கை கட்டுபடுதல் விதைகள் மூலம் தாவர வகைகள் பறவைகள் இனப்பெருக்கம் நிலை பெறுவதற்கான காரணமாக அமைந்துள்ளன எனவே வலசை போகும் பாதைகள் நீர்நிலைகள் தங்கும் இடங்கள் போன்றவற்றை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானது.

பார்வையாளர்களுக்கும் பயனுள்ள வகையில்  நடை பாதைகள் அமைத்தல் பறவைகள்  வருகையை ஊக்குவித்தல் போன்றவற்றை  மாநகராட்சி நிர்வாகம் செய்யலாம்.ஒரு பகுதியில் காணப்படும் பறவைகளின் புகைப்படங்கள் ebird.org இணையதளத்தில் பதிவேற்றபடுகின்றன. இது பறவை விரும்பிகளுக்கு  மத்தியில் ஆக்கப்பூர்வமான போட்டியை ஊக்குவிக்கும் ஒரு மெய்நிகர் தளமாகும். திருச்சியில் உள்ள குளங்கள் ஏரிகளில் வலசை செல்லும் பறவைகள்  ஓரிரு மாதங்கள் தங்க வாய்ப்புள்ளது எனவே அவற்றை பாதுகாப்பது நம்முடைய கடமை!.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn