செல்போனை வழிப்பறி செய்தும், ஆயுதத்தால் தாக்கிய நபருக்கு 7 வருடம் சிறைதண்டனை மற்றும் ரூ.5000/- அபராதம்

செல்போனை வழிப்பறி செய்தும், ஆயுதத்தால் தாக்கிய நபருக்கு 7 வருடம் சிறைதண்டனை மற்றும் ரூ.5000/- அபராதம்

கடந்த (10.03.2022)-ந் தேதி அரசு மருத்துவமனை காவல்நிலைய பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வழிமறித்தும் அவரிடம் இருந்த செல்போனை வழிப்பறி செய்தும் அதனை தடுக்க முயன்ற நபரை ஆயுதத்தால் தாக்கி செல்போனை பறித்து சென்றதாக புகார் பெறப்பட்டு வழக்குப்பபதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் எதிரியான நாச்சிகுறிச்சியை சேர்ந்த ஸ்ரீராம் (24), த.பெ. பாண்டியன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, கடந்த (25.08.2022)-ந் தேதி மேற்படி எதிரி ஸ்ரீராம் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள்.

மேற்படி வழக்கில் மாண்புமிகு திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அவர்களால் மேற்படி எதிரி ஸ்ரீராம் என்பவருக்கு 394 r/w 397 இ.த.ச பிரிவு- ன்படி 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறைதண்டனை வழங்கியும், பாதிக்கப்டட நபருக்கு ரூ.5,000/- இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்திய அரசு மருத்துவமனை காவல்நிலைய காவல் ஆய்வாளர், காவல் ஆளிநர்கள் மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision