பொதுமக்களுக்கு இலவச மருத்துவ மற்றும் ஆலோசனை முகாம்

பொதுமக்களுக்கு இலவச மருத்துவ  மற்றும் ஆலோசனை முகாம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 24 மணி நேர ரத்த சுத்திகரிப்பு பரிசோதனை செய்யபடுகிறது. இந்த மருத்துவ முகாம் கடந்த 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. 

குறிப்பாக இன்று உலக சிறுநீரக தினம் முன்னிட்டு சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரகத் தொற்று நோய்கள், அனைத்து சிறுநீரக பிரச்சனைகள், மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், ரத்தம் கலந்து போவது, அவசரமாக சிறுநீர் கழித்தல்,சிறுநீரக கல் தொந்தரவு, சிறுநீரகப் புற்றுநோய், சிறுநீர் அடைப்புகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த முகாமில் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 

இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு டாக்டர் கணேஷ் அரவிந்த் (சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று சிறுநீரக மருத்துவ நிபுணர்), டாக்டர். கார்த்திகேயன் (சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்) ஆகியோர்கள் மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு அறிவுரைகளும் மற்றும் சிகிச்சை முறையினை குறித்து எடுத்துரைத்தனர். மேலும் இந்த மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision