நாட்டுப்புற கலைஞர்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருச்சி காவல்துறை!!

நாட்டுப்புற கலைஞர்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருச்சி காவல்துறை!!

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

திருச்சி கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்காக திருச்சி மாவட்ட நிர்வாகமும் திருச்சி காவல்துறையினர் பல்வேறு முன்னெடுப்புகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு சானிடைசர், முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவை பற்றி பாரம்பரிய நாட்டுப்புற இசை கலைஞர்கள் தப்பாட்டம் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகர ஸ்ரீரங்கம் காவல் துணை ஆணையர் சுந்தர மூர்த்தி, அரசு மருத்துவமனை காவல்துறை உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.