விமன் இந்தியா மூவ்மெண்ட் செயற்குழு கூட்டம்
விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் பாத்திமா கனி அவர்கள் தலைமையில் திருச்சியில் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது அவர்களும், SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஹம்ஜத் பாஷா அவர்களும் கலந்துக்கொண்டனர்.
விமன் இந்தியா மூவ்மென்ட் மாநில பொதுச்செயலாளர் பாயிஜா ஷஃபீக்கா, மாநில செயலாளர் தஸ்லிமா, மாநில செயலாளர் ரஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் : 1) சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அலட்சியப் போக்கினால் தவறான சிகிச்சை அளித்து, குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இதனை விமன் இந்தியா மூவ்மெண்ட் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் தமிழக அரசு தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தவறிழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விமன் இந்தியா மூவ்மெண்ட் கோரிக்கைவிடுக்கிறது.
2) குடும்ப பெண்களின் மேம்பாடுக்காக தமிழக அரசு அறிவித்திருக்கும் "கலைஞர் மகளிர் உதவி தொகை" வழங்கும் திட்டத்தை விமன் இந்தியா மூவ்மெண்ட் வரவேற்கிறது.
3) மத்திய அரசு கொண்டுவரக் கூடிய பொது சிவில் சட்டத்தை தனிப்பட்ட குழுவிடமிருந்து மட்டும் ஆலோசனை செய்து சட்டம் இயற்ற தீர்மானித்திருப்பது கண்டனத்திற்குரியதாகும். இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் கூட்டமைப்புடன் எவ்வித ஆலோசனை செய்யாமல், அவர்களுடைய பரிந்துரைகளை நிராகரிக்கும் வகையில் ஒன்றிய அரசு நடந்துக்கொள்வதை விமன் இந்தியா மூவ்மெண்ட் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இச்சட்டத்தை தமிழக அரசு கொண்டுவராமல் இருக்க சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும் என விமன் இந்தியா மூவ்மெண்ட் கோரிக்கைவிடுக்கிறது.
4) அன்றாட அத்தியாவசிய பொருளான மளிகை பொருட்கள் மீது 70% விலை உயர்ந்திருப்பதை விமன் இந்தியா மூவ்மெண்ட் வன்மையாகக் கண்டிக்கிறது.
5) மணிப்பூரில் வசிக்கும் சமூகங்களுக்கிடையில் அமைதியை நிலைநாட்டவும், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் விமன் இந்தியா மூவ்மெண்ட் கோரிக்கைவிடுக்கிறது.
6) விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக மாவட்ட கட்டமைப்பு சீரமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடத்த தீர்மாணிக்கப்பட்டது.
7) விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் தேசிய தலைமையின் அறிவுறுத்தலின்படி, பெண்களுக்கான கருத்தரங்கம் நடத்த தீர்மாணிக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn