கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமாக திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டவர்கள் வந்து மன நிம்மதிக்காகவும் ,வேண்டுதல்களுக்காவும் சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி செல்கின்றனர் .
இத் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். மன நிம்மதியை தேடி வரும் பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் பெண்கள் காசு தரவில்லை என்றால் அவர்களை சபிப்த்து திட்டுகின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் .
கோவில் பணியாளர்கள் அவர்களை விரட்டினாலும் கோயிலை சுற்றி சுற்றி வந்து பிச்சை எடுப்பதையே தொழிலாக கொண்டுள்ள பெண்கள் மீது காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision