திராணியற்ற அரசாங்கம் தான் திராவிட மாடல் ஆட்சி - திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.
தஞ்சை, திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் என்னை பற்றி சில விமர்சனங்கள் செய்துள்ளார்.
ஆட்சியில் இருக்கும் போது எதுவும் செய்யவில்லை என கூறியுள்ளார் 2011 முதல் 2021 வரை மிக சிறந்த ஆட்சியை அதிமுக தந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை சிறப்பான ஆட்சி தந்தார்கள் அதன் பின் என் தலைமையிலான ஆட்சியிலும் சிறப்பான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள், சட்ட கல்லூரிகள், கலை அறிவியல் கல்லுரிகள் கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் சேலத்தில் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை பூங்கா இன்று வரை திறக்கவில்லை, அதை திறக்க கூட திராணியற்ற முதலமைச்சர் இன்றைய முதலமைச்சர்.
திராணியற்ற அரசாங்கம் தான் திராவிட மாடல் ஆட்சியாக பார்க்கப்படுகிறது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பம்தம் போட்டவர் தான் இன்றைய முதலமைச்சர். அதை ரத்து செய்த அரசாங்கம் அதிமுக அரசு. திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக், மடிக்கணினி திட்டம் ஆகியவற்றை ரத்து செய்துள்ளார்கள்.
தமிழகத்தில் விவசாயம் செய்ய உரம் முழுமையாக கிடைக்கதா சூழல் உள்ளது. முதலமைச்சர் திறனற்ற ஆட்சியை நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் 525 அறிவிப்புகளை திமுக வெளியிட்டது ஆட்சிக்கு வந்த பின் அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வந்தவர் தான் ஸ்டாலின்.
தி.மு.க ஆட்சியில் எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியாது. கொரோனாவை கட்டுப்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு தான். அதை செய்தது அதிமுக அரசு. அதை பிரதமரே பாராட்டினார். தமிழகத்தில் போதை பொருள் விற்பனை தாராளமாக நடக்கிறது. கொலை, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றுக்கு காரணம் போதை பொருள் தான். போதை பொருள் விற்பனையை தடுக்க இந்த அரசால் முடியவில்லை அதை ஒத்துக்கொண்டு முதலமைச்சர் தற்போது விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஸ்டாலின் மக்களை குறித்து கவலை இல்லை குடும்ப உறுப்பினர்கள் குறித்து தான் கவலைப்படுகிறார். எனக்கு திறமை இல்லை என முதலமைச்சர் கூறுகிறார். சாதாரண கிளை செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆனதற்கு திறமை தான் காரணம். ஆனால் ஸ்டாலின் கருணாநிதியின் அடையாளத்தை வைத்து தான் முதலமைச்சர் ஆனார்.
கருணாநிதியின் பேரன் என்கிற காரணத்தால் தான் உதயநிதி துணை முதல்வராக்கப்பட்டுள்ளார். அதிமுக தான் ஜனநாயக கட்சி. திமுக வில் அது நடக்காது. உதயநிதி அவர் துறையில் சிறப்பாக செயல்பட்டதாக கூறுகிறார். அப்படி என்றால் மற்ற அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லையா? மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கி எந்த திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.
மற்ற திட்டங்களுக்கு நிதி இல்லை என கூறும் முதலமைச்சர் சென்னை அருகே உள்ள முட்டுக்காட்டில் கலைஞர் பெயரால் பன்னாட்டு அரங்கம் தற்பொழுது திறக்க வேண்டிய அவசியம் என்ன அதற்கு நிதி எங்கிருந்து வந்தது. மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது. முதலமைச்சர் என் மீது வஞ்சகம் தீர்க்க விமர்சனம் செய்துள்ளார். அதிமுக ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படுமா என்கிற கேள்விக்கு, இது கற்பனையான கேள்வி, இன்னும் கூட்டணியே அமைக்கவில்லை, அப்படி இருக்கையில் கற்பனையான கேள்விக்கு பதில் கூற முடியாது.
பா.ஜ.க உடன் கூட்டணி வைக்கப்படுமா என்கிற கேள்விக்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. யார் யார் எங்களுடன் கூட்டணிக்கு வருகின்றார்களோ அவர்கள் எல்லாம் ஒத்த கருத்து உடையவர்கள் தான். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் அதற்கு முன்பு எது கூறினாலும் அது நிற்காது. திமுக ஆட்சியை கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் கூட்டணியில் விரிசல் வந்துவிட்டதாக தான் மக்கள் நினைப்பார்கள். கூட்டணி உடையும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.
திமுக கூட்டணி உறுதியாக உள்ளது என மீண்டும் மீண்டும் கூறுவதே அந்த கூட்டணி கட்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தான் அதனால்தான் மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பாஜக இல்லாத கூட்டணிக்கு அதிமுக தயாரா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு...... தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக தலைமையை ஏற்கக்கூடிய ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து செயல்படுவோம் என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision