தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டம்
திருச்சி மாவட்டம் முசிறியில் கூட்டுறவு விவசாய வங்கி வளாகத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டம் நடத்தினர்.
இதில் அனைத்து வேளாண் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க, நகர கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர்களிடம் அபராத தொகையை இருமடங்காக வசூலிப்பதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை அதிக அளவில் இறக்கி விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் செய்துள்ளதை வாபஸ் பெற வேண்டும்.
தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்குள் பணிய அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநில அளவிலான காலவரையற்ற போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.
அதன்படி இன்று திருச்சி மாவட்ட கௌரவ தலைவர் ஜெகநாதன் தலைமையில், மாவட்ட செயலாளர் ஜெயபால் முன்னிலையில் தாப்பேட்டை, முசிறி, தொட்டியம், ஒன்றிய பகுதிகளை சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision