திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சோதனை - 47 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சோதனை - 47 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் கைமாற போவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் நேற்று மாலை திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேசன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தப் போது அலுவலகம் உள்ளே இருந்த ஊழியர்கள் கணக்கில் வராத ரூபாய் 47, ஆயிரம் பணத்தை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் உடனடியாக அந்த பணத்தை கைப்பற்றி சார்பதிவாளர் அலுவலகத்தில் துவரங்குறிச்சி பொறுப்பு பதிவாளர் இந்துகுமார் உட்பட சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision