பணி நேரத்தில் மது அருந்தி பெண்களிடம் தகராறு செய்யும் அரசு ஊழியர்

பணி நேரத்தில் மது அருந்தி பெண்களிடம் தகராறு செய்யும் அரசு ஊழியர்

திருச்சியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவர் தவச்செல்வனுடன் திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு நியாய விலை கடையில் அரிசி வாங்க சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கு பணியில் இருந்த ஊழியர் நிசாரிடம் ரேஷன் கார்டை கொடுத்து அரிசி கேட்டுள்ளார்‌. அதற்கு நிசார் சசிகலாவை தரக்குறைவாக பேசி ரேஷன் கார்டை வீசி எரிந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா அவரை உற்று நோக்கிய போது நிசார் மது போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் கையில் பீர் பாட்டிலுடன் மது அருந்தியப்படியே சசிகலாவை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

பின்னர் மது பாட்டிலை அவர் கீழே வைத்த போது சசிகலா தனது கணவரை அழைத்து அதனை செல்போனில் படம் பிடிக்கும்படி கூறியுள்ளார். அப்பொழுதும் எதற்கும் அசராமல் நிசார் அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே அமர்ந்திருந்தார். கீழே வைத்த பீர் பாட்டிலை கூட அவர் மூடி மறைக்கவில்லை. பின்னர் இதனை வீடியோ பதிவாக செய்து கொண்ட சசிகலா சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பரவ விட்டார்.

மேலும் ரேஷன் கடையில் அவர்கள் அரிசி கேட்ட பொழுது 100 மூட்டை அரிசியை எலி தின்று விட்டது என அவர் கூறியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த சசிகலா அரசு ஊழியர் பணி நேரத்தில் மது போதையில் இருந்து உள்ளார் எனவும், பெண்களை தகாத வார்த்தைகளால் பேசுகிறார் எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision