திருச்சி சாலையில் திடீர் பள்ளம்-திண்டாடிய பொதுமக்கள்

திருச்சி சாலையில் திடீர் பள்ளம்-திண்டாடிய பொதுமக்கள்

திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் மேம்பாலம் முன்பு சாலையில் திடீர் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு. ஸ்ரீரங்கம் நகருக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மாம்பழச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டு தற்போது திடீரென சாலையில் பெரிய பள்ளமாக ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறையினர் பேருந்துகள் மற்றும் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டுள்ளனர். இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision