திருச்சி பா.ஜ.க. நிர்வாகி அலுவலகம் மற்றும் சலூன் கடையில் கொள்ளை
திருச்சி ராம்ஜிநகர் அருகேயுள்ள வடக்கு அரியாவூரை சேர்ந்தவர் முத்துசாமி (39). இவர் பாஜக அரசு தொடர்பு பிரிவு செயலாளராகவும், வழக்கறிஞராகவும் உள்ளார். இவர் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சத்திரப்பட்டியில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் இலவச சட்ட ஆலோசனை மையம் மற்றும் வழக்கறிஞர் அலுவலகம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் திருப்பூர் பல்லடத்தில் பிரதமர் கலந்து கொண்ட என் மண் என் மக்கள் நிறைவு விழாவிற்கு சென்று விட்டு இரவு 12 மணி அளவில் திருச்சி திரும்பிய இவர் கடை முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தைனத்தை எடுத்துக் கொண்டு வீடு சென்றார். இந்த அலுவலகம் இருக்கும் வணிக வளாகத்திலேயே சலூன் கடை ஒன்று இயங்கி வருகிறது.
வழக்கம் போல் சலூன் கடை உரிமையாளர் விஜய் கடையை திறக்க வந்த போது தன்னுடைய கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அருகில் இருந்த முத்துசாமியின் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு முத்துசாமிக்கு தகவல் தெரிவித்தார்.
அலுவலகத்திற்கு வந்த முத்துசாமி அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் வைத்திருந்த ரூ.28 ஆயிரம் ரொக்கம், டிவி, லேப்டாப் மற்றும் ஆவணங்கள் ஆகியவை திருடுபோனது தெரிய வந்தது. மேலும் தனது அலுவல கத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவான டி.விஆர்-யையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
அருகில் இருந்த சலூன் கடையில் கடையில் இருந்த டி.வி, ரூ.2 ஆயிரம், டிரிம்மர் மிசின் கொள்ளை போயி ருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த ராம்ஜிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. இது குறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy vision