ஆசீர் பெற்று பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவிகள்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி மாவட்டத்தில் இன்று மொத்தம் 30,003 மாணவர்கள் தேர்வெழுதி வருகின்றனர்.
திருச்சியில் மொத்தம் 130 தேர்வு மையங்களில் இன்று +2 பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் கொட்டப்பட்டு சிறைச்சாலையில் உள்ள 1 தேர்வு மையமும் அடங்கும். இதே போல் தனி தேர்வர்கள் 9 தேர்வு மையங்களில் இன்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வு எழுதும் போது கண்காணிக்க 1600 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதை தவிர மாணவர்கள் எந்தவித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடாமல் இருப்பதை தடுக்க( flying squad ) 250 பறக்கும் படை உறுப்பினர்கள் பணியில் உள்ளனர். சுழற்சி முறையில் அவ்வபோது பல்வேறு தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணிப்பார்கள். பார்வை மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு தேர்வர்கள் சொல்வதை எழுத 185 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் (தேர்வர்கள் சொல்வதை எழுதுவார்கள்)
இன்று முதல் நாள் தேர்வு என்பதால் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் காலை 08:00 மணிக்கு முன்பாகவே வருகை தந்து மரத்தடியில் அமர்ந்து படித்து வந்தனர். பொதுத்தேர்வு குறித்து மாணவர்களுக்கு எவ்வித அச்சமும் தேவையில்லை என தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்தி தேர்வு மையங்களுக்குள் அனுப்பி வைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy vision