திருச்சியில் குடிநீர் விநியோகம் சாலை சீரமைக்கும் பணியால் நிறுத்தம்

திருச்சியில் குடிநீர் விநியோகம் சாலை சீரமைக்கும் பணியால் நிறுத்தம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டையம் பேட்டை அருகில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரிவாக்கம் செய்யும் இடத்தில் ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அரியமங்கலம் மற்றும் பொன்மலை பகுதிக்கு செல்லும் ஆயிரம் விட்டம் உள்ள குழாயை சாலையின் ஓரத்தில் மாற்றி புதிய குழாய் அமைக்கும் பணியும் முடிவுற்றது.

பழைய பிரதான குழாயுடன் இணைக்க வேண்டியுள்ளதால் வரும்
 5 .3.2021 வெள்ளிக்கிழமை ஒருநாள் மேற்கூறப்பட்டுள்ள நீரேற்று நிலையம் தொடர்புடைய பகுதிகளான அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட விரகு பேட்டை ,மகாலட்சுமி நகர், மலைக்கோயில் நேருஜி நகர், அரியமங்கலம் ,உரக்கடை ,  ஜெகநாதபுரம், மலையப்ப நகர், ரயில் நகர் ,செந்தண்ணீபுரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட முன்னாள் ராணுவத்தினர் காலனி ,விவேகானந்தர் ஜே கே நகர் ,மேலகல்கண்டார்கோட்டை ,பொன்னேரிபுரம் ,கல்லுக்குழி ,பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை சுப்ரமணியபுரம் விமான நிலையம் பகுதி, காமராஜர் நகர் நகர் ,காஜாமலை, கேகே நகர் ,தென்றல் நகர் ,ஆனந்த் நகர், சத்தியவாணி, முத்து நகர், மற்றும்  ஐயைப்பநகர் மற்றும் கோ அபிஷேகபுரம்    கோட்டத்திற்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர் ,கே சாத்தனூர் ,அன்பு நகர் ,கிருஷ்ணமூர்த்தி நகர் தொண்டைமான் நகர் ,கிராப்பட்டி போன்ற பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.

மறுநாள் 6.3.2021அன்று வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்குமாறு தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH