ஆரோக்கியம் மற்றும் பிட்னெஸ் விழிப்புணர்வு போட்டி - அக்டோபர் ஆறாம் தேதிக்கு தயாராகுங்கள் மக்களே !!

Health and Fitness Awareness Contest

ஆரோக்கியம் மற்றும் பிட்னெஸ் விழிப்புணர்வு போட்டி - அக்டோபர் ஆறாம் தேதிக்கு தயாராகுங்கள் மக்களே !!

திருச்சி பொன்னகரில் செயல்பட்டு வரும் S2T உடற்பயிற்சி கூடம் தன்னுடைய இரண்டாவது வருடத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில் ஆரோக்கியம் மற்றும் பிட்னெஸ் இரண்டையும் பற்றிய விழிப்புணர்வு போட்டி STRIVE CHALLENGE 2024 ஐ  நேதாஜி இன்ஸ்டிடியூட் ஆப் பயர் அண்ட் சேப்டியுடன் இணைந்து நடத்தவுள்ளது. இதுகுறித்து S2T உடற்பயிற்சி கூட நிறுவனர் ஹரி தகவல்களை பகிர்கிறார்.


உடல்நல ஆரோக்கிய மேம்பாட்டிற்காக கடந்த 2022 ஆண்டு அக்டோபர் மாதம் முதல் S2T ஜிம்மை நடத்தி வருகிறேன். கடந்த வருடம் முதல் வருடத்தை நிறைவு செய்தபோது உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நம் உடற்பயிற்சி கூடத்திலேயே நடத்தினோம். தற்போது இரண்டாம் வருடத்தை நிறைவு செய்யவுள்ளோம், அதனால் ஆரோக்கியம் மற்றும் பிட்னெஸ் இரண்டும் ஒன்றுடன் ஓன்று இணைந்தது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு போட்டி ஒன்றை அக்டோபர் ஆறாம் தேதி ஞாயிறன்று நடத்த திட்டமிட்டுள்ளோம். 

இந்த போட்டியை பொறுத்தவரை நம் அனைவருக்கும் ஆரோக்கியத்திற்கு தேவையான உடற்பயிற்சிகளின் வகைகளான கார்டியோ, flexibility வலிமை, தசை வலிமை, சமண்படுத்தும் வலிமை(balance strength ) ஆகியவற்றை சேர்த்து போட்டியாக நடத்தவுள்ளோம், 

அதில் முதலில் 200 மீட்டர் ஓட்டம்,  Deadlift என கூறப்படும் பளு தூக்குதல் உடற்பயிற்சி , farmers Walk எனப்படும் எடையை தூக்கிக்கொண்டு நடக்கும் உடற்பயிற்சி, தொடர்ந்து சக்கராசனம், பிளாங்க் செய்து கடைசியில் மீண்டும் 200 மீட்டர் ஓட்டதுடன் என இந்த போட்டி நடைபெறும். 

இந்த போட்டியில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம். 14-19, 20-29, 30-39, மற்றும் 40 வயதிற்கு மேல் என நான்கு பிரிவுகளில் நடைபெறும். இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும், வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 5000 ரூபாய் ரொக்க பணமும், இரண்டாம் பரிசாக 3000 ரூபாய் ரொக்க பணமும், மூன்றாம் பரிசாக 2000 ரூபாய் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்தார். 

திருச்சிலயே முதன்முறையாக இந்த STRIVE CHALLENGE 2024 கல்லுகுழி மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டிக்கான முன்பதிவு தற்போது நடந்துகொண்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய... 

https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision