பல்வேறு சுமைகளை தாங்கி மாநகரை சுத்தமாக்கும் உங்களின் பணி போற்றுதல்குரியது - திருச்சி விஷன் அறக்கட்டளை நிகழ்வில் ஆட்சியர் நெகிழ்ச்சி
திருச்சி விஷன் அறக்கட்டளை சார்பில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டார்.
இதில் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக வேஷ்டி சேலை இனிப்புகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.... தூய்மையாளர்களின் பணி மகத்தான பணி நாம் தூய்மையாக வெளியில் நடமாடுவதற்கு இந்த தூய்மை பணியாளர்களின் பணி முக்கியத்துவமான ஒன்று.
வீட்டில் இருக்கும் குப்பைகளை எடுப்பதற்கு நேரம் இல்லாத சூழ்நிலையில் இருக்கும் நாம் மாநகரை தூய்மையாக வைக்கும் உங்களுடைய பணிக்கு நன்றி என்றார். தீபாவளி பட்டாசு குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கும்.மறு நாளே மாநகரில் குப்பை இருந்த இடம் தெரியாமல் தூய்மையாக்கும் தூய்மை பணியாளர்கள் பணி போற்றுதல்குரியது.
தூய்மை இல்லாத ஒருவர் இருக்கிற போது உடல் நலம் பாதிப்பு அவரை மட்டுமல்ல அவரை சார்ந்த குடும்பம் நகரம் பாதிக்கும். உங்களுக்காக நேரம், பணி சுமை சம்பளம் விடுமுறை கிடைக்காது நேரத்தில் உங்களுடைய கஷ்டங்களை அறியாமல் இல்லை விரைவில் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஊரையும் எங்களையும் பாதுகாக்க உங்கள் உடல்நிலை பாதுகாப்பு அவசியம். பாதுகாப்பு உபகரணங்களை வைத்து தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் நீங்கள் ஆராக்கியத்துடன் இருந்தால் தான் உங்களுடைய குடும்பத்தையும் நகரையும் பாதுகாக்க முடியும் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் குப்தா, அனுஜ் டைல்ஸ் உரிமையாளர் தனசேகரன், சமூக ஆர்வலர் பெட்டவாய்த்தலை சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision