"கூட்டணி என்பது அரசியலில் நிரந்தரமல்ல" - பாஜக வானதி திருச்சியில் பேட்டி!

"கூட்டணி என்பது அரசியலில் நிரந்தரமல்ல" - பாஜக வானதி திருச்சியில் பேட்டி!

பாரதிய ஜனதா கட்சியில் மகளிர் உறுப்பினர் இணையும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பெண்கள் பாஜகவில் உறுப்பினர்களாக இணைந்தனர்.

Advertisement

விழாவிற்கு பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும் போது..... "தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் என்பதில் எந்தவித முரண்பாடு இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகதான் தலைமை வகித்து வருகிறது. இன்று வரை அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதிமுக கட்சி தங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்து உள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடத்தப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை முதலில் நடத்தவேண்டும். அதன் பின்னர் தலைமை முடிவெடுக்கும். தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பாஜக சட்டமன்றத்தில் நுழையும். 

பாஜகவும் தமிழகத்தில் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் கூட்டணியில் ஒதுக்கப்படும் இடத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய எங்கள் தலைமையை வலியுறுத்துவோம். ஜாதி வாரியான கணக்கெடுப்பு நல்ல விஷயம் வரவேற்கிறோம். இந்த பணி விரைவில் முடிக்கப்பட வேண்டும். திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்திற்கு தடை இல்லை. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. இருப்பினும் வேல் யாத்திரை நடத்துவதற்கு எத்தனை கட்டுப்பாடுகள். சட்டத்திற்கு உட்பட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டுதான் பாஜக உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் பொய் பிரச்சாரத்தால் அவர்கள் வெற்றி பெற்றார்கள். மக்கள் அவர்கள் கூறிய பொய்யால் வாக்களித்தார்கள். இதனால் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். இரண்டே நிமிடத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் போடப்பட்டு உள்ளது. இதன் மூலம் வௌிப்படையான நிர்வாகம் நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது தொிகிறது. மத்திய அரசு திட்டங்களின் பலன் பெறுவதை தமிழக மக்கள் அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்கள். தமிழகத்தில் இதுதான் நிரந்தர கூட்டணி என்று யாராலும் கூற முடியாது. வேளாண் சட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் திமுகவை போல யாராலும் பொய் பேச முடியாது. தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டத்தை ஆதரித்துவிட்டு இப்போது மாற்றி பேசுகிறார்கள். சன் டிவி மூலம் ஸ்டாலின் குடும்பத்தினர் எத்தனை கோடி வருமானம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பாருங்கள். 

Advertisement

அதன் பிறகும் கலைஞர் டிவி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் என்ன? அதற்கான முதலீட்டை விவசாயிகளுக்கான திட்டத்திற்கு கொடுத்திருக்கலாம். எத்தனை பள்ளிகள் திறந்தீர்கள், விவசாயிகளுக்காக கிராமப்புறத்தில் ஏதாவது செய்தீர்களா? ரெட் ஜெயண்ட் மூவீஸ் நடத்தும் உதயநிதி கிராமபுறத்தில் இரண்டு கிடங்காவது விவசாயிகளுக்காக கட்டி கொடுத்தாரா? திமுக தலைவர்கள் எல்லோரும் கல்லுாரிகள், வியாபாரம் என தொடங்கினார்களே தவிர விவசாயிகளுக்காக ஏதுவும் செய்யவில்லை. இப்போது பிரதமர் மோடி விவசாயிகளுக்காக ஏதாவது செய்ய நினைக்கிறார். இதுதான் எதார்த்தம் நிச்சயம் இதனை விவசாயிகள் புரிந்து கொள்வார்கள்" என்று அவர் கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO