திருச்சியில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் தீவிபத்து

திருச்சியில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் தீவிபத்து

திருச்சி கோகினூர் சிக்னல் அருகே உள்ள லே டெம்ஸ் போர்டு ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உள்ளே தங்கி இருந்தவர்கள் ஓட்டம்.2 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றன. 4 மாடி ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதால் சாலை ரோடு பரபரப்புடன் உள்ளது.

40 அறைகளில் தங்கி இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியே ஓடி வந்துவிட்டனர். 5வது மாடியில் உள்ள ஸ்பா மற்றும் கணக்குப் பிரிவு தீவிபத்து ஏற்பட்டு உள்ளது.தொடர்ந்து இந்த ஹோட்டல் கட்டடம் புகை மூட்டத்துடன் காணப்படுகிறது.

வெடி சத்தத்துடன் சுமார் 45 நிமிடம் தீ எரிந்து கொண்டு இருக்கிறது தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO