அடுத்து கே.என்.நேரு அல்லது அனிதா ராதாகிருஷ்ணன் - திருச்சியில் ஹெச்.ராஜா பேட்டி

அடுத்து கே.என்.நேரு அல்லது அனிதா ராதாகிருஷ்ணன் - திருச்சியில் ஹெச்.ராஜா பேட்டி

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் போக்கிற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் ஹெச். ராஜா கருப்பு சட்டை அணிந்தபடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்..... செந்தில் பாலாஜி வழக்கை பொறுத்தவரை 60 நாளில் மாநில அரசு இந்த வழக்கை விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பல்லாயிர கோடி ரூபாய்க்கு கிராவல்களை எடுத்து விற்ற குற்றவாளி பொன்முடி - ஆடி 1ம் தேதி நேற்று இ.டியின் ஸ்பெசல் ஆபர் இங்கு நடந்தது. டிஜிபி சமூக வலைதளத்தில் ஒருவர் முதல்வரை சித்திரத்து புகைப்படத்தை வரைந்தார் என்பதால் அவரை எப்படி கைது செய்ய உத்தரவிடுவார்? திமுகவில் உள்ள அத்தனை மந்திரிகளும் திருடர்கள். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு கண்டனம் தெரிவிக்காமல் அங்கு நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் முதலமைச்சர் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியை தொடர்ந்து அடுத்து கே.என்.நேரு அல்லது அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும். தக்காளி விவசாயிகள் படும் பாடு அதிகம் எனவே 40 ரூபாய்க்கு கீழே தக்காளி விலை குறைந்தால் அரசே அதனை வாங்குவோம் என்கி முடிவை எடுக்க வேண்டும். நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பொதுமக்கள் தக்காளி வாங்காமல் இருந்தால் தக்காளியின் விலை குறைக்கலாம்.

காவேரி விவகாரத்தில் திமுக தமிழ்நாட்டில் துரோகம் இழைத்துள்ளது. காவிரி விவகாரத்தில் கலைஞர் துரோகம் செய்தார். அதேபோல் தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் துரோகம் செய்து வருகிறார். இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தமிழ்நாட்டில் யாருக்கும் தகுதி இல்லை. அமலாக்கத்துறை சோதனைக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மட்டும் 19 ஆயிரம் கோடி ரூபாய் பிடிபட்டிருக்கிறது என்பது தகவல். தமிழகத்தில் மண்ணடி கோவை போன்ற இடங்களில் பிரச்சனை ஏற்பட்ட போது டிஜிபி ஏன் குற்றவாளிகளை கைது செய்யவில்லை? அவர் என்ன கம்பு சுத்தி கொண்டு இருந்தாரா?

செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தற்போது நடத்தி வரும் சோதனையை பொருத்தவரை 2014 ஆம் ஆண்டு போட்ட வழக்கு - அப்போது மு க ஸ்டாலின் குளித்தலையில் பேசினார், செந்தில் பாலாஜி எப்படியாவது சிறைக்கு செல்ல வேண்டும். எனவே அதனை நிறைவேற்ற தான் தற்போது அமலாக்கத்துறை உதவி செய்து வருகிறது. அமலாக்கு துறையில் மட்டும் தான் ஒரு அதிகாரி தவறாக கைது ஏதும் எடுத்தால் அந்த அதிகாரிக்கு சிறை என்கிற வழக்கம் உண்டு என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision