திருச்சி கல்லூரி மாணவனை தாக்கிய காவலர்கள் - அரசு மருத்துவமனையில் அனுமதி

திருச்சி கல்லூரி மாணவனை தாக்கிய காவலர்கள் - அரசு மருத்துவமனையில் அனுமதி

திருச்சி மாவட்டம், நொச்சியம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி படித்து வரும் மாணவன் தனது நண்பனை அழைத்து வருவதற்காக இருசக்கர வாகனத்தில் சமயபுரத்திற்கு சென்றுக்கொண்டிருந்தார். சமயபுரம் அருகே சென்றபோது திடீரென காற்று வீசியதால் புழுதிமண் மாணவனின் கண்ணில் பட்டுள்ளது.

இதனால் மாணவன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கண்களை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சமயபுரம் காவல்நிலையத்தில் பணிபுரியும் 3 காவலர்கள் சந்தேகப்பட்டு மாணவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தன்னைப்பற்றி முழு விவரங்களை தெரிவித்தும் நம்பாத போலீசார் அந்த மாணவனை தகாத வார்த்தைகளால் பேசி செயின் பறிக்க வந்தாயா என கூறி வசைப்பாடியுள்ளனர்.

மேலும் உனது அப்பா அம்மா அழைத்தால் கூட இனி சமயபுரம் பக்கம் வரக்கூடாது என எச்சரித்த காவலர்கள் மாணவனை கைகளை உயர்த்த சொல்லி பின்புறம் லத்தியால் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த அந்த மாணவன் துடிதுடித்து அலறியுள்ளான். இது குறித்து தனது தந்தைக்கு தகவல் தெரிவிக்கவே சிறுவனின் தந்தை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிறுவனை சிகிச்சைக்காக சேர்த்தார்.

காவலர்கள் தாக்கிய சம்பவம் குறித்து அவசர உதவி எண் 100 என்ற எண்ணை அழைத்து மாணவன் புகார் தெரிவித்தபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வீட்டுக்கு செல்லுங்கள் என உதவி மைய போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவன் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision