ரயிலில் செல்போன் திருட்டு மற்றும் செயின் பறிப்பு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
இருப்பு பாதை காவல் கூடுதல் இயக்குனர் வனிதா மற்றும் காவல்துறை துணைத் தலைவர் அபிஷேக் தீக்ஷித் ஆகியோர்களின் உத்தரவு பேரில் திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் மற்றும் இருப்புப் பாதை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி ரயில் நிலையம் மற்றும் ரயில் வண்டிகளில் தொடர் கொள்ளை, வழிப்பறி, திருட்டு, கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.
அதன்படி (13.11.2022)-ம் தேதி திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த ராஜ்மோகன் ராஜா என்கின்ற ராக்கெட் ராஜா (22) என்பவர் ரயில்களில் தொடர் திருட்டு செயின் பறிப்பு குற்ற செயல்களை ஈடுபட்டதை கண்காணித்து எதிரி ராக்கெட் ராஜாவை கைது செய்தும், அவரிடம் பணம் மற்றும் செல்போன் மொத்த மதிப்பு 11,400 ஆகியவற்றை திருச்சி இருப்புப்பாதை காவல் நிலைய ஆய்வாளர் மோகனசுந்தரி வழக்கு சொத்தை கைப்பற்றினர்
மேலும் ராக்கெட் ராஜாவை விசாரித்த போது இதற்கு முன்பு டூவீலர் திருட்டு கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இவரது குற்றங்களை தடுக்கும் நோக்கில் திருச்சி இருப்பு பாதை காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் மற்றும் திருச்சி மாநகரம் தெற்கு துணை ஆணையர் ஸ்ரீதேவி பரிந்துரைப்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எதிரி ராக்கெட் ராஜாவை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை இன்று சார்பு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதுபோன்ற ரயில்களில் பொதுமக்களிடம் மிரட்டி தாலி செயின் பறிப்பு மற்றும் திருட்டு குற்றங்களை தொடர்ந்து ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO