திருச்சியில் தீபாவளியை முன்னிட்டு தரைக்கடை நடத்த 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் - ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சியில் தீபாவளியை முன்னிட்டு தரைக்கடை நடத்த 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் - ஆட்சியர் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி டவுன் ஹாலில் உள்ள மைதானத்தில் தரைக்கடை வியாபாரம் நடத்த விரும்புவோர் வரும் 6ம் தேதிக்குள் விண்ணபிக்கலாம்.

Advertisement

அப்பகுதியில் 80 சதுர அடி கொண்ட தரைக்கடைகள், மூன்று பகுதிகளில் சுமார் 80 கடைகளுக்கு அமைத்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

கேட்பு தொகையினை, வருவாய் கோட்டாட்சியர் திருச்சிராப்பள்ளி என்ற பெயரில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் 9ம்தேதி குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டு கடைகள் அமைத்திட அனுமதி அளிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்து உள்ளார்