கல்வி உரிமை சட்டம் (RTE) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் பூமி தன்னார்வ அமைப்பு

கல்வி உரிமை சட்டம் (RTE) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் பூமி தன்னார்வ அமைப்பு

பூமி  தன்னார்வ அமைப்பு இந்தியாவின் மிகப்பெரிய  இளைஞர் தன்னார்வ இலாப நோக்கற்ற அமைப்புகளில் ஒன்றாகும் . 
பூமி அமைப்பு  கல்வி, சுற்றுச்சூழல், விலங்குகள், சமூக நலன் போன்ற காரணங்களுக்காக இந்தியா முழுவதும் 12 க்கும் மேற்பட்ட நகரங்களில் 30,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கொண்டு  செயல்பட்டுவருகிறது .

 பூமி  அமைப்பானனது இந்தியா முழுவதும் 25,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கு உதவுகிறது.கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ) 
6 முதல் 14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையின் கல்வியையும் ஒரு அடிப்படை உரிமையாக மாற்றுகிறது. அனைத்து தனியார் பள்ளிகளும் 25% இடங்களை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்.

இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் அல்லது கல்வி உரிமை சட்டம்(ஆர்.டி.இ) 2009 இன் படி கல்வி என்பது நாட்டில்  உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமையாக மாற்றியது, சமூகத்தின் பின்தங்கிய மற்றும் பொருளாதார ரீதியில் உள்ள குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீட்டை உத்தரவாதம் செய்கிறது. நாடு முழுவதும் கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 22 லட்சம் சேர்க்கை இடங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது , இதில் 15 லட்சம் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) மூலமாக  1.2 லட்சம் இலவச இடங்கள் கிடைக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவற்றில் 50-60% இடங்கள் மட்டுமே நிரம்புகிறது. 

இதற்கு முக்கியமான காரணம் மக்களிடையே கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமையும், விண்ணப்பங்களை சமர்பிப்பதில் (Offline) மக்களுக்கு எளிமையான அணுகல் முறை இல்லாமையும் காரணமாகும்.

கல்வி உரிமை சட்டம் (RTE) பிரிவு 12 (1) (C) பற்றிய விழிப்புணர்வை பூமி தமிழ் நாட்டில் ஏற்படுத்திவருகிறது.தனியார் மற்றும் அரசு உதவிபெறாத சிறுபான்மையல்லாத பள்ளிகளில் LKG மற்றும் 1-ம் வகுப்புகளின் சேர்க்கை இடங்களில் குறைந்தபட்சம் 25% இடங்கள், நலிவடைந்த மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு (இருப்பிடத்திலிருந்து 1 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள பள்ளிகளில்) ஒதுக்கப்படுவதை இந்த சட்டம் கட்டாயமாக்கியுள்ளது. மக்களிடம் இந்த சட்டத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், 2019-ம் ஆண்டில் 50% சுமார் நிரப்பப்படவில்லை. 


பூமியின் இணைநிறுவனர் டாக்டர் கே கே பிரகலாதன் கூறியதாவது, "ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்துக்கு குறைவாகப் பெறுவோர் அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி பெற இடங்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசாங்கம் இத்தகைய சிறப்பான வாய்ப்பை அளித்துள்ளபோதிலும், பலருக்கு இதுபற்றிய விழிப்புணர்வு இல்லை. இதனால் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த கடன் வாங்கி, பொருளாதார சுமைக்குள்ளாகின்றனர். தேவையுள்ள குழந்தைகள் இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறந்த கல்வி பெறுவதை உறுதிப்படுத்துவதே பூமியின் முக்கிய நோக்கம். 

"கடந்த ஆண்டுகளில் குழந்தைகள் இலவசக் கல்வி பெறுவதில் பூமி தீவிரமாகப்பணியாற்றியது,
தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறது.

2020-21கல்வியாண்டில், பெருந்தொற்று சூழ்நிலையின் மத்தியிலும் 2709 குழந்தைகள்
கல்வி உரிமை சட்டத்தின்மூலம் பள்ளிகளில் சேர பூமி உதவியுள்ளது.
குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்க விரும்பும்
பெற்றோர் மற்றும் தன்னார்வலர்கள்
எங்களைஅணுகுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.

2021- 22 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கைகக்கு ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆண்டும் கல்வி உரிமை சட்டம் (RTE) பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

 LKG மற்றும் 1-ம் வகுப்பில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர். பூமியின் உதவி மைய எண் 8144-22-4444 தொடர்புகொள்ளலாம் . கல்வி உரிமை சட்டத்தின்மூலம் இலவசக் கல்வி பெற தகுதியுள்ளவார்களை உங்களுக்குத் தெரியுமானால், அவர்களது தகவல்களை www.ilavasakalvi.in என்ற எங்களது வலைதளத்தில் பதிவு செய்யும் அனைவருக்கும்  பூமி அமைப்பின் தன்னார்வலர்கள் அவர்களோடு இணைந்து அவர்கள் இத்திட்டத்தை பயன்படுத்துவதற்கான முயற்சியில் உறுதுணையாக செயல்பட இருக்கின்றனர். 
 

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் பொருளாதார அல்லது சாதி பின்னணியைப் பொருட்படுத்தாமல் தரமான தொடக்கக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதே கல்வி உரிமைச்  சட்டத்தின்(ஆர்.டி.இ) முக்கிய நோக்கமாகும். இதை கருத்தில் கொண்டு பூமி அமைப்பானது  பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.சமூக அக்கறை கொண்ட சினிமா பிரபலங்கள் மூலமும் வீடியோ வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH