பொன்மலை பணிமனைக்கு சிறந்த ஆற்றல் மேலாண்மைக்கான விருது
எரிசக்தி மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் பல்வேறு வகையிலான தொழிற்சாலைகளுக்கு ஆண்டுதோறும் இந்திய தொழில் கூட்டமைப்பு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. நிகழாண்டில் இதற்கான கூட்டம் இணைய வழியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ரயில்வே பணிமனைகளில் தேசிய அளவில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை சிறந்த ஆற்றல் திறனுடைய பணியாக தேர்வு செய்யப்பட்டு, சிறந்த ஆற்றல் மேலாண்மைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்த விருதை பெரும் சிறப்பையும் பெற்றுள்ளது.
கொரோனா காலத்தில் உற்பத்தியை 19.42 சதவீதம் பெருகியது. 25.6 சதவீதத்துக்கும் குறைவான எரிசக்தி பயன்பாடு, 2 குறுகிய குறுங்காடுகளை நிறுவியது. கரியமில வாயு வெளியீடு இருபத்தி 8.8 7% குறைப்பு உள்ளிட்ட அம்சங்களுக்கான இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn