திருச்சி வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு - தாமதமாக வந்த துணை மேயர்  -அனுமதி மறுப்பு

திருச்சி வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு - தாமதமாக வந்த துணை மேயர்  -அனுமதி மறுப்பு

கரூரில் ஒரு லட்சம் பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கிடும் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்  வந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையம் வந்த தமிழக முதல்வருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, ரகுபதி, மகேஷ், திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தி நாதன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

திருச்சி மாநகராட்சி மேயர் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் முதல்வரை வரவேற்க ஒரு மணி நேரம் முன்னதாக தங்களை சோதனைக்கு உட்படுத்தி வரவேற்கத் தயாராக இருந்தனர். மாநகராட்சி துணை மேயர் திவ்யா கடைசி நேரத்தில் தாமதமாக வந்து விமான நிலையம் வந்தார். பாதுகாப்பு பிரிவில் உள்ள போலீசார் துணை மேயரை முதல்வரை வரவேற்கும் பகுதிக்கு செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர் ஓரமாக நின்ற துணை மேயர் திவ்யா முதல்வர் சென்றவுடன் வேறு ஒரு காரில் ஏறி சென்றார்.

மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்தி குறிப்பில் அதிகாரபூர்வமாக தமிழக முதல்வரை வரவேற்ற முக்கிய பிரமுகர் பெயர்களில் துணை மேயர் பெயர் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல்வரை வரவேற்க முன்னதாக வரவேண்டும் என துணை மேயருக்கு தெரியாதா? சிந்திக்கவில்லையா? என்ற கேள்வி அங்கு வந்த தொண்டர்களின் பேச்சாக இருந்தது. பின்னர் கார் மூலம் தமிழக முதல்வர் கரூர் புறப்பட்டு சென்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.....
https://t.co/nepIqeLanO