திருச்சி மக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் பிரதீப் குமார் அறிவுறுத்தல்

திருச்சி மக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் பிரதீப் குமார் அறிவுறுத்தல்

+2ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்த இளைஞர் பெங்களூருவில் பணியாற்றி வந்தவர் நண்பர்களுடன் கோவா சென்று திரும்பிய போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவர் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த பின்பு தான் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இன்புளுயென்சா வைரஸ் லேசான அறிகுறிகளுடன் உள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாகி உள்ளது.

திருச்சியில் கொரோனா பாதிப்பு தினசரி ஐந்திலிருந்து பத்து வரை இருந்தது. ஆனால் சில நாட்களாக 15லிருந்து 20 நபர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். திருச்சி கொரோனா தினசரி பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. இன்ஃபுளுவென்ஸ் வைரஸ் லேசான அறிகுறிகள் இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் 7 பேர் வீட்டுத்தனிமையில் தான் இருக்கிறார்கள். மக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை.

முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். வேலு திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன எனவே மக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn