திருச்சியில் 50 லிட்டர் நாட்டு சாராய நொதி ஊறல் போட்டவர் கைது

திருச்சியில் 50 லிட்டர் நாட்டு சாராய நொதி ஊறல் போட்டவர் கைது

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஊரடங்கை கடுமையாக்கும் வகையில் 24 ஆம் தேதியில் இருந்து தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுள்ளது.

இதனால் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் டாஸ்மார்க் கடைகள் இன்று வரை 22 நாட்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மதுபானங்கள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மது கிடைக்காத நிலையில் சாராயம் தயாரிப்பது திருச்சி மாவட்டத்தில் அதிகரித்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடக்குப்பட்டியைச் சேர்ந்த தமணன் (46) என்பவர் சாராயம் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் தமணன் வீட்டில் சோதனை செய்த போது 50 லிட்டர் நாட்டுச் சாராய நொதி ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆய்வக மாதிரிக்கு 1 லிட்டர் எடுத்து கொள்ளப்பட்டு மீதமிருந்த சாராய நொதி ஊறலை சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.

இதனையடுத்து தடை செய்யப்பட்ட, சட்டவிரோதமாக சாராயம் தயாரித்த தமணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC