Sebco Properties என்ற நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூபாய் 4 கோடி மதிப்பிலான 47 சென்ட் அரசு நிலம் மீட்பு
திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், கொட்டப்பட்டு கிராமம், பழைய புல எண்.226 வார்டு. "AW", பிளாக்-12, நகரளவை எண். 2, பரப்பு விஸ்தீரணம் 47 சென்ட் ரூபாய் 4 கோடி மதிப்பிலான நிலம் திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர் தலைமையில் அகற்றப்பட்டது. திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், கொட்டப்பட்டு கிராமம், பழைய புல எண்.226 வார்டு. "AW", பிளாக்-12, நகரளவை எண். 2, பரப்பு 47 சென்ட் ரூபாய் 4 கோடி மதிப்பிலான நிலம் அரசுக்கு சொந்தமான தரிசு புறம்போக்கு நிலத்தை
ஜே.எஸ்.லொரான் மொராய்ஸ் என்பவரால்
350 ச.மீ பரப்பளவில் சுமார் 3 அடி உயரத்திற்கு கான்கிரீட் தளம் அமைத்து அதன் மேலே புல் தரை உருவாக்கி புல் தரையின் நடுவே கிரானைட் மேடை அமைத்து அதன் மீது Sebco Properties என எழுதப்பட்டு அமைக்கப்பட்டு அதன் மேலே
பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததை வருவாய் துறையினர் கண்டறிந்து மேற்படி ஆக்கிரமிப்பு அகற்ற உரிய படிவம்-7 மற்றும் படிவம் -6 சார்வு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பினை அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இந்நேர்வில் ஆக்கிரமிப்புதாரர்கள் தரப்பில் தானாக முன்வந்து ஆக்கிரமிப்பினை அகற்றிக் கொள்ளாத காரணத்தினால் இன்று 25.03.2022 திருச்சிராப்பள்ளி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் த.கலைவாணி தலைமையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டது.
திருச்சிராப்பள்ளி கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் மற்றும் திருச்சிராப்பள்ளி உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய்
கோட்டாட்சியர் தவச்செல்வம் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை
மேற்பார்வையிட்டனர். இந்நிகழ்வில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO