பாலக்கரை பகுதியில் கொரோனா நிவாரண உதவிகள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்!

பாலக்கரை பகுதியில் கொரோனா நிவாரண உதவிகள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்!

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பாலக்கரை அருகே மல்லிகை புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலக்கரை பகுதிக்குட்பட்ட துரைசாமிபுரம், எடத்தெரு, மல்லிகைபுரம், கீழத்தெரு, இருதயபுரம், அன்னை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1000ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது.

Advertisement

இப்பகுதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பினை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

மேலும் அவர்... பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வையும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் நடைபெறும் அதிமுக தலைமையிலான அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதில் கழக நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.