CAPSIM SPRING 2021 CHALLENGE - இந்திய அளவில் முதல் பரிசு வென்ற BlM  கல்வி நிறுவன மாணவர்கள்

CAPSIM SPRING 2021 CHALLENGE - இந்திய அளவில் முதல் பரிசு வென்ற BlM  கல்வி நிறுவன மாணவர்கள்

திருச்சியில் பாரதிதாசன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் மாணவர்கள்  CAPSIM SPRING 2021 CHALLENGE 
 என்ற மே மாதம்  நடைப்பெற்ற போட்டியில் உலக அளவில் மூன்றாம் இடமும் இந்தியாவில் முதல் இடமும் பிடித்துள்ளனர்.  
உலகளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இப்போட்டியின் இறுதிகட்டத்தில் 6 வணிகப் பள்ளிகள் சேர்ந்த மாணவர்கள்  போட்டியில் கலந்து கொண்டனர் .
Bharathidasan insitutute of Mnegment trichy ,bar llan university of Israel ,Georgia institute of Technnology, Thammasat university Thailand,University of georgia,indian institute of manegment Bengalore
ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்குகொண்டனர்.


திருச்சி பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சார்பாக  
டாக்டர் ஹரினா தாமன் ,மோனிஷ் CS,நித்தின் ரஞ்சன் மற்றும் சிவசுப்ரமணியம்  முதுகலை வணிக மேலாண்மை இறுதியாண்டு மாணவர்கள்  போட்டியில் கலந்து கொண்டனர். 
இதுகுறித்து இந்நிறுவனத்தின் இயக்குனராக தலைமை ஏற்றுள்ள Dr.Asit Barma  அவர்கள் கூறுகையில் எங்கள் நிறுவனத்தில் உள்ள மாணவர்கள் பல்வேறு  போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
 தங்களுடைய  கற்றல் திறனை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து உள்ளனர்.


The Capsim challenge 
ஒவ்வொரு ஆண்டிற்கும் இரண்டு முறை  போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது இப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு தகுதி சுற்று மற்றும் இறுதி சுற்றில் உள்ள மதிப்பெண்கள் மூலம் அவர்களுடைய வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
 குழுவாகவோ அல்லது தனி நபராகவோ  எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் போட்டியில் வெற்றிபடிநிலைக்கு அவர்களை கொண்டுசெல்கிறது.

பல கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தங்களுடைய கற்றல் திறனையும் தங்கள் கற்றறிந்தவற்றை உலகிற்கு எவ்வாறு பொருளாதார ரீதியாக பயன்படுத்த முடியும் என்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு தங்களை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இப்போட்டிகள் அமைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து பலதரப்பட்ட மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.   இந்த ஆண்டு நடைபெற்ற இப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற வெற்றியும் பெற்ற பட்டியலில் இந்தியாவில்  இக்கல்வி நிறுவனம் மட்டுமே என்பது சிறப்புக்குரியது.

பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம்  1984 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு இன்று வரை  மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்கிவதோடு அவர்கள் வாழ்வில் வெற்றிபெற செய்யும் ஒரு சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மிகவும் பழமை மற்றும் தலை சிறந்த மேலாண்மை பள்ளிகளில்  பட்டியலில் பாரதிதாசன்  இன்ஸ்டிடியூட் ஆப்  மேனேஜ்மென்ட் ஒன்றாகும். இன்றைக்கு  இங்கு கல்வி பயின்ற முதுநிலை வணிக மேலாண்மை மாணவர்களும் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களும் உலக அளவில் தங்களுடைய துறையில் சிறந்து விளங்குகின்றனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon