சரக்கு போக்குவரத்தில் சாதனை - வருவாய் வாரிக்குவிக்கும் திருச்சி ரயில்வே

சரக்கு போக்குவரத்தில் சாதனை - வருவாய் வாரிக்குவிக்கும் திருச்சி ரயில்வே

திருச்சி கோட்ட ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளதாவது : திருச்சி ரயில்வே கோட்டத்தில் 2022 ஏப்ரல் முதல் தேதி டிச. 31ம் தேதி வரை பயணிகள் போக்குவரத்தில் ரூ. 372.84 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15.33 சதவீதம் அதிகம். மற்ற கோச்களில் பயணம் மேற்கொண்ட வகையில் ரூ. 28.77 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 17.77 சதவீதம் அதிகமாகும். பொருட்களை ஏற்றி இறக்கிய வகையில் ரூ.603.26 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.11 சதவீதம் அதிகம். இந்த காலகட்டங்களில் 27.21 மில்லியன் பயணிகள் பயணம் மேற்கொண்டனர். கடந்த ஆண்டை விட 25.01 சதவீதம் அதிகம். அதேபோல (01.04.2022) முதல் (31.12.2022) வரை 10,406 மில்லியன் டன்கள் பொருள்கள் ஏற்றி இறக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 7.15 சதவீதம் அதிகம்.

திருச்சி கோட்டத்தில் செயல்படும் வணிகவியல் துறை, கிளை, துறை செயல்பாட்டு எலக்ட்ரிக்கல் பொறியியல் துறை, பாதுகாப்பு துறை, கேட்டி சக்தி யூனிட் தனி பிரிவு ஆகிய துறைகளும் சிறப்பாக செயலாற்றி வருகிறது. கடந்த வாரம் செனை ஐசிஎப்பில் நடந்த 68வது ரயில்வே வார விழாவில் சிறப்பாக பணியாற்றிய திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு 9 விருதுகள் வழங்கப்பட்டது.

கோட்டங்களுக்கு இடையில் சிறந்த செயல்பாட்டிற்கான 2வது இடத்தை திருச்சி ரயில்வே கோட்டம் பிடித்து பொது மேலாளர் கோப்பையை வென்றது. திருச்சி ரயில்வே கோட்டம் சிறப்பாக பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட இந்த விருதுகள் எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற உற்சாகத்தை வழங்கியுள்ளது என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision