தேசியவாத காங்கிரஸ் யாருக்கு சொந்தம் ? INDIA வில் அடுத்த ஓட்டை !!

தேசியவாத காங்கிரஸ் யாருக்கு சொந்தம் ? INDIA வில் அடுத்த ஓட்டை !!

சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி இரண்டாக உடைந்தது. சரத்பவார் அண்ணன் மகன் அஜித்பவார் கட்சியை உடைத்து வெளியேறி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் துணை முதல்வராக உள்ளார். அஜித்பவார் அணியை சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர். சரத்பவார் மற்றும் அஜித்பவார் என்ற இரு அணிகளை சேர்ந்தவர்களும் கட்சி மற்றும் அதன் சின்னமான கடிகாரம் தங்களுக்கானது என்று கோரி தேர்தல் கமிஷனில் புகார் செய்துள்ளனர். 

கட்சி யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்கும் விதமாக இரு அணிகளை சேர்ந்த தலைவர்களுடன் தேர்தல் கமிஷன் வரும் 6ம் தேதி விசாரணை நடத்துகிறது. இதற்காக நேரில் ஆஜராகுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில் தேர்தல் கமிஷனில் ஆஜராகிறார் சரத்பவார் இரு அணி தலைவர்களுக்கும் தேர்தல் கமிஷன் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விசாரணையில் பங்கேற்க போவதாக சரத்பவார் நேற்று தெரிவித்தார். இக்கட்சியின் நிறுவனர் யார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து, சரத்பவார் மகளும், என்சிபி எம்பியுமான சுப்ரியாசுலே கூறுகையில், 'என்சிபியை ஆரம்பித்தவர் சரத்பவார். எனவே கட்சி சின்னம் அவருடனே இருக்கும் என்பது வெளிப்படையான உண்மை. கட்சியில் எந்த மோதலும் இல்லை. எனவே, கட்சி சின்னம் வெளியே போகும் என்ற கேள்விக்கே இடமில்லை" என்றார். இவர்கள் கட்சியே யாருக்கு சொந்தம் என்கின்ற கேள்விக்கே இன்னும் முடிவு தெரியாத நிலையில் இவர்கள் INDIA கூட்டணியில் அங்கம் வகித்து அங்கே பங்கம் ஏற்படுத்தாமல் இருந்தால் சரிதான்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision