திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா நோய்த்தொற்று முதல் இரண்டு அலையினை போன்ற பாதிப்பினை மூன்றாவது அலையில் ஏற்படாத வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி போடுவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் பொது முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை, முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னிலை வழங்கப்பட்டது. தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை மற்றும் மொத்த சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையை சார்ந்தவர்கள் மொத்தம் பதிவு செய்யப்பட்டவர்கள் 13,033 பேரில் இதுவரை தடுப்பபூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 12,046. 92.4% பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 

மத்திய மற்றும் தனியார் சுகாதாரத்துறை பணியாளர்கள் மொத்தம் 27,848 நபர்களில் 22,117 நபர்கள் 79.4 % தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வரும் வருவாய்த்துறை, காவல்துறை, ஆயுதப்படை, இரயில்வே பாதுகாப்பு படை மற்றும் மற்ற முள் களப்பணியாளர் பிரிவுகளைச் சேர்ந்த பணியாளர்கள் மொத்தம் 29,476 நபர்களில் 22,545  தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 76.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த கொண்டவர்களின் எண்ணிக்கை 1,41,258. பொதுமக்கள் 4,16,447 பணியிடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1,68,283 திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 7,70,650 என்ற எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. பொதுமக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில் மார்ச் மாதம் 65,672 ஏப்ரல் மாதம் 67, 003, மே மாதம் 92,080 ஜூன் மாதத்தில்  2,054,25 என்ற எண்ணிக்கையில் இருந்தது. ஜூலை மாதத்தில் படிப்படியாக தடுப்புசி போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து மொத்தமாக 1,55,056 தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர்.

அரசு மருத்துவமனையில் மொத்தமாக 5,21,400 என்ற எண்ணிக்கையிலும், தனியார் மருத்துவமனைகளில் 63,185 என்ற எண்ணிக்கையிலும் மொத்தமாக 5,85,236 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு 100% தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள   மாவட்டமாக திருச்சி மாறிட சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU