திருச்சியில் பாதுகாப்பு அமைச்சக இடங்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய மாநகராட்சி விரைவில் நடவடிக்கை
திருச்சி மாநகராட்சி தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள காலியான இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. திருச்சி மாநகராட்சியில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமாக கே.கே.நகர், மன்னார்புரம், கன்டோன்மென்ட் மற்றும் பொன்மலைப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களை களைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன.
இதனால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. அதேபோன்று ரயில் பாதையின் அருகில் உள்ள இடங்களையும்இரவு நேரத்தில் சமூகவிரோதிகள் தவறாக பயன்படுத்துவதாகவும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் வார்டு கவுன்சிலர்களிடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 46 வது வார்டு கவுன்சிலர் ஜி ரமேஷ் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாப்புச்சொதுக்குள் நுழைய முடியாது எம்.ஜி.ஆர் நகர் மற்றும் காஜாமலையில் உள்ள பாதுகாப்பு நிலத்தை சுத்தம் செய்ய அப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அதற்கு தீர்வு காணும் வகையில் மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.
60வது வார்டு உறுப்பினர் காஜாமலை விஜய் பேசுகையில், கேகே நகர் மற்றும் காஜாமலை உள்ளடிக்கிய பகுதிகளிலும் இதே போன்ற பிரச்சினைகள் உள்ளன காலியிடங்களில் சட்டவிரோதமாக பன்றிகள் வளர்க்கப்படுகின்றன கேகே நகரில் உள்ள காலி இடத்தில் இருந்து சுமார் 40 பன்றிகள் பிடிக்கப்பட்டன. அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது இடங்களை பராமரிப்பதற்கு ஆட்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். திருச்சி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான நிலங்களை சுத்தம் செய்ய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவிப்போம் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO