சந்திராயன் விண்கலம் நிலவில் நல்லபடியாக தரையிறங்குவதற்காக திருச்சியில் வழக்கறிஞர்கள் சிறப்பு பூஜை

சந்திராயன் விண்கலம் நிலவில் நல்லபடியாக தரையிறங்குவதற்காக  திருச்சியில் வழக்கறிஞர்கள் சிறப்பு பூஜை

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான 3 விண்கலம், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த மாதம் 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள, 'புரபல்ஷன் மாட்யூல்' எனப்படும் உந்து கலத்தில் இருந்து. நிலவில் தரையிறங்க உள்ள, 'லேண்டர்' சாதனம் கடந்த 17ம் தேதி பிரிந்து சென்றது. இது, நிலவில் இன்று (23.08.2023) மாலை சரியாக 6.04 மணிக்கு தரை இறங்க உள்ளது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுரையின்படி திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள விநாயகர் கோவிலில், இந்தியாவின் சந்திராயன் விண்கலம் நிலவில் நல்லபடியாக தரையிறங்குவதற்காக பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர்கள் சிறப்பு பூஜை செய்து பிரார்த்தனை செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மூத்த வழக்கறிஞர் தனபால் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் முத்து மாணிக்க வேலன், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் எஸ் மாரியப்பன், மாவட்ட செயலாளர் சிந்தை சரவணன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், குற்றவியல் வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் சசிகுமார் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision