தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உங்கள் உரிமை! திருச்சியில் பூமிஅமைப்பினர் விழிப்புணர்வு

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உங்கள் உரிமை! திருச்சியில்  பூமிஅமைப்பினர் விழிப்புணர்வு

இலவசக் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பூமி தன்னார்வ தொண்டு நிறுவனம் மிக முக்கியமான ஒன்று. இலவச கல்வி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் அதன் ஒரு முயற்சியாக திருச்சியில் நேற்று கிறிஸ்தவ ஆலயங்கள் முன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.

இதுகுறித்து தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர் ஒருவர் பேசுகையில்... குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் 2009-ன் படி இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு LKG மற்றும் 1-ம் வகுப்புகளில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்தச் சட்டம் ஏழை, எளிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்த ஒரு தனியார் பள்ளியிலும் நன்கொடை அளிக்காமலும், பள்ளி நிர்வாகத்தின் மூலம் நேரடி நேர்காணல் செய்யப்படாமலும் சேர்க்க வழிவகை செய்கிறது.

தொடக்கக் கல்விக்கே லட்சங்களில் கட்டணம் வசூலித்துக்கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய குழந்தைகளும் சேர்ந்து கல்வி கற்க முடியும் என்ற நிலை இந்தச் சட்டத்தின் மூலம் சாத்தியமாகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகளைப் பள்ளி நிர்வாகங்கள் தடுத்து நிறுத்தவோ, பள்ளியிலிருந்து வெளியேற்றவோ முடியாது. இந்த இலவச சலுகையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற பல மக்களின் பொதுவான சந்தேகங்களுக்கும் உதவும் வகையில் எங்களுடைய தொண்டு நிறுவனத்தினர் உதவி வருகின்றனர். இன்று வரை இலவச கல்வி குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் முழுமையாய் சென்று சேரவில்லை. நேற்றைய தினம் ஞாயிறு குருத்தோலை தினம் எனவே அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் பொதுமக்கள் அதிகமாக கூடுவர்.

எனவே கிறிஸ்தவ ஆலயங்கள் முன் பூமி தொண்டு நிறுவனம் தங்களுடைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினோம்.இதன்மூலம் அதிகபட்சமான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்ற நோக்கோடு இதனை செய்து வருகின்றோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO