ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம்

திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகளை அரியமங்கலம் பகுதியிலுள்ள குப்பை கிடங்கில் கொண்டு சேர்ப்பது தான் தினசரி வேலை. ஆனால் இதற்கு மாறாக திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை  பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் அமைந்துள்ள குளத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

இதனால் சுகாதார சீர்கேடு நடந்து வருகிறது. TN 45 BM 1029 திருச்சி -திண்டுக்கல் சாலையில் பிராட்டியூர் போக்குவரத்து அலுவலகம் எதிரில் மாநகராட்சி வாகனத்தில் எடுத்து செல்லும் குப்பைகளை  கொட்டுகின்றனர். குப்பை தரம் பிரிக்கும் இடங்கள் நிறுவியும், பிரித்த குப்பைகளை அரியமங்கல குப்பை கிடங்கில் கொட்ட தான் வாகனங்களை கான்ட்ராக்ட் முறையில் நியமித்தது திருச்சி மாநகராட்சி

ஆனால் வாகன உரிமையாளர்கள் செலவை மிச்சம் பிடிக்க இது போன்று சாலை ஓரங்களிலேயே குப்பையை கொட்டிவிட்டு செல்கின்றனர். அதே வேலையை தான் மாநாகராட்சிக்கு சொந்தமான வாகனங்களும் செய்கின்றனர். இது போல் செய்து டீசல் செலவை மிச்சமபடுத்தி அதை கணக்கில் ஏற்றிவிட்டு முறைகேடு வேறு நடக்கிறது

ஒரு பக்கம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலை, மறுபக்கம் சிட்டியை நாறடிக்கும் வேலை அருமை மாநகராட்சி இதே போன்று பல முறை பல இடங்களில் செய்து வருகிறது. இது பற்றி பல முறை புகார் கொடுத்தும் திருச்சி மாநகராட்சி ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் என்று தான் தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn