திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் ஆலய ஆடிப்பூரத் திருத்தேரோட்டம்
காவிரி கரையில் உள்ள தேவாரப் பாடல்கள் பெற்ற திருத்தலங்களில் பிரசித்திப்பெற்ற திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருமண தடைகள் நீங்குவதற்காக பிரார்த்தனை செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்வாலயத்தில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த வாரம் நடைபெற்று நாள்தோறும் விஷாலாட்சி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்தார். இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சி ஆன திருத்தேரோட்டம் இன்று (01.08.2022) மாலை 3 மணி அளவில் வடம் பிடிக்கப்பட்டு நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கோஷமிட்டவாறு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் ஞிலிவனேஸ்வரர் திருத்தேரும் ஆடி மாதத்தில் அம்மன் திருத்தேரும் வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO