ஆடிப்பெருக்கு விழா - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நாளை (03.08.2022) ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி நீர்நிலைகளில் மக்கள் வழிபடுதல் மற்றும் நீராடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (02.08.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில்.... தற்போது காவிரியில் 25 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடும் பொதுமக்கள் பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் கொண்டாட வேண்டும்.
அதே சமயம் சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் நீர்நிலைப் பகுதிகளில் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். அதுமட்டுமின்றி நீர் நிலைகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என அவர் தெரிவித்தார்
இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம், மண்டலத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் மற்றும் மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO