ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவர்களை காப்பாற்றிய பெண்மணியை நேரில் அழைத்து பாராட்டிய திருச்சி ஐ.ஜி

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவர்களை காப்பாற்றிய பெண்மணியை நேரில் அழைத்து பாராட்டிய திருச்சி ஐ.ஜி

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, அலவந்திபுரம் கிராமத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் (13.01.2022) அன்று மாலை கபிஸ்தலம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கங்காதரபுரம் காவேரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்த போது ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். அப்போது அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அலவந்திபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சந்தானம் மனைவி சரோஜா (60) என்பவர் தனது புடவையை அவிழ்த்து வீசி 13 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்களை காப்பாற்றினார்.

14 வயது மதிக்கத்தக்க மற்றொரு சிறுவனின் உடல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மறுநாள் (14.01.2022) காலை சுவாமிமலை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட அம்பி அய்யர் தோட்டத்திற்கு அருகில் உள்ள படுகையில் கண்டு எடுக்கப்பட்டது.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு நபர்களை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சரோஜா, வயது 60, என்பவரின் வீரதீரச் செயலை பாராட்டும் வகையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn