வீட்டில் வளர்த்த கோழி, முயல்களை கடித்து குதறிய தெருநாய்கள் சிசிடிவி காட்சி வெளியீடு - பரபரப்பு

வீட்டில் வளர்த்த கோழி, முயல்களை கடித்து குதறிய தெருநாய்கள் சிசிடிவி காட்சி வெளியீடு - பரபரப்பு

திருச்சி மாநகராட்சியில் அதிகமான தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சியிடம் புகார் மனு அளித்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில்   பிரதான பகுதிகளான தில்லை நகர், உறையூர், கண்டோன்மென்ட், ராஜாகாலனி, பாலக்கரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை, பெரிய மிளகுபாறை உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பொதுமக்கள் நாய்க்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். தினமும் இரவு நேரங்களில் தெருக்களை கடப்பவர்களுக்கு மனதில் பீதியாகவே உள்ளது. இந்த நிலையில் திருச்சி ராஜா காலனி பகுதியில் உள்ளவர் வீட்டில் அவர் ஆசையாக வளர்த்த கோழி மற்றும் முயல்களை தெரு நாய்கள் உள்ளே வந்து கடித்து குதறும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

சிசிடிவியில் பதிவாகியுள்ள அந்த நாய்கள் ராஜா காலனி பகுதி தெருவில் அலையும் நாய்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக நாய் விடும் போராட்டம் என அறிவித்து ஆர்ப்பாட்டம் மட்டும் செய்தனர்.

இந்நிலையில் பொதுமக்கள் அதிகமானோர் தெருநாய்களின் தொல்லையால் அவதிப்படுவதும், தெரு நாய் தொல்லை தொடர்கதையாகி வருவதும் இந்த சிசிடிவி காட்சி மூலம் தெளிவாக தெரிகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81