பசுமைப் புரட்சியில் ஈடுபட்டுள்ள திருச்சி மால்வாய் கிராம  இளைஞர்கள் சிறுவர்கள்

பசுமைப் புரட்சியில் ஈடுபட்டுள்ள திருச்சி மால்வாய் கிராம  இளைஞர்கள் சிறுவர்கள்

100 இளைஞர்கள் இருந்தால்  இந்தியாவையே மாற்ற முடியும் என்று விவேகானந்தர் கூறியது போல் இளைஞர்களும் அடுத்த தலைமுறை சிறுவர்களும் இணைந்து  ஒரு கிராமத்தையே  பசுமையாக மாற்றியதற்கு   சான்றாய் திருச்சியில் மால்வாய் கிராமம் பகுதி இளைஞர்களும் சிறுவர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பசுமைப்புரட்சி  பணியில் ஈடுபட்டுள்ள முத்தையன் கூறுகையில்,

நம்மை சுற்றியுள்ள பகுதியை நாம் பாதுகாப்பாகவும்   இயற்கையைக் காக்கும் பொருட்டு நம் செயல்பாடுகள் அமைந்தால்  நாம் நலமாக இருக்கலாம் என்பதை முழுமையாக நம்பி  எங்கள் கிராமத்தை முதலில் பசுமையாக மாற்ற முயற்சித்தோம்.கொரானா  காலகட்டம் என்பதால் இளைஞர்களும் சிறுவர்களும் வீடுகளில் இருக்கும் போது அவர்களுடைய நேரத்தை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற ஒரு சிறு முயற்சியில் தொடங்கியது இன்றைக்கு ஒரு விருட்சமாக மாறியுள்ளது.

இந்த கிராமத்தை சுற்றி 1000 மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளோம்.நாட்டு ரக மரக்கன்றுகளை நட்டு வைத்தோம்.மரக்கன்றுகளை நட்டு வைத்ததோடு மரக்கன்றுகள் பராமரிப்பதற்காக தினமும்   டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் பயன்படுத்திக்கொள்ள உதவுவதற்கு எங்கள் கிராம இளைஞர்களின் முன்வந்தனர் அது மட்டுமின்றி கிராமப் பகுதியில் உள்ள ஏரிகளையும் வாய்க்கால்களையும் தெர்வாரினோம்.

 அரசு பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வெளிநாட்டுவாழ் இளைஞர்கள் எங்களுக்கு உதவ முன் வந்தனர்.அவர்கள் அளித்த நன்கொடையின் மூலம்  சிறப்பாக  தொடர்ந்து கிராமத்து தேவைகளை பூர்த்தீ செய்யும்  முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம்.


 இந்த உலகம்  சந்தித்துக் கொண்டிருக்கும் அத்தனை இன்னல்களுக்கும்  இயற்கைக்கு எதிராக நாம் செய்த அத்தனை செயல்களுக்கும் வினை பயனாகும்.எனவே இனிவரும் காலங்களில் நம் தலைமுறையும் அடுத்த தலைமுறைகளும்  இணைந்து  புவிவெப்பமயமாதல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும். இந்தத் தொடக்கம் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்  என்கிறார் முத்தையன்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn