திருச்சியில் தமிழ்மொழி சுருக்கெழுத்து தேர்வில் தொழில்நுட்ப கோளாறு குழப்பம் - தேர்வு எழுத முடியாமல் தவிப்பு

திருச்சியில் தமிழ்மொழி சுருக்கெழுத்து தேர்வில் தொழில்நுட்ப கோளாறு குழப்பம் - தேர்வு எழுத முடியாமல் தவிப்பு

தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் சார்பில் சுருக்கெழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்றும் இன்றும் (19, 20.03.2022) இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் திருச்சி மாவட்டத்தில் 2 மையங்களில் (துவாக்குடி,சேதுராபட்டி) 1500க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதுகின்றனர். நேற்று ஜீனியர், சீனியர் தமிழ் மொழி சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது. அப்போத அவர்களுக்கு ஒலி வெளியிட்ட போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக யாருக்கும் சரியாக கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு இரண்டு மையங்களிலும் எழுந்தது.

தேர்வு அனைவரும் சரியாக எழுதவில்லை என்றனர். எனவே தமிழ்நாடு வணிகவியல் சங்கம்  சார்பாக மறுதேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி, மதுரையிலும் இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

இன்று ஆங்கில மொழியில் சீனியர்களுக்கு சுருக்கெழுத்து தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இன்றும் சீனியர் தேர்விலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளனர். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேரடியாக அரசு வேலை வாய்ப்பு எளிதில் கிடைக்கும். கூடுதலாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில்  இவர்களின் சுருக்கெழுத்து தேர்வு மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO