திருச்சி ரயில் நிலையத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய 20 கிலோ கஞ்சா பறிமுதல்
மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வழியாக கோவை செல்லும் ஜனசதாப்தி ரயிலிலும், இதே போல் புவனேஸ்வரிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலிலும், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது ஜனசதாப்தி ரயில் பெட்டியில் போலீசார் சோதனையிட்ட போது பயணிகள் இருக்கைக்கு அடியில் பை ஒன்று இருந்துள்ளது. அந்த பை யாருடையது என்று அந்த பெட்டியில் இருந்தவர்களிடம் கேட்ட போது யாரும் உரிமை கோரவில்லை. இதனை தொடர்ந்து அந்த பையை பிரித்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தொிய வந்தது.
உடனே அந்த பையை கைப்பற்றி ரயில்வே காவல்நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது. கைப்பற்றப்பட்ட பையில் மதிப்புடைய 20 கிலோ கஞ்சா இருந்ததும், அதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என தொிய வந்தது. இந்த கஞ்சாவை கடத்தி வந்தவர் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட பையை ரயில்வே போலீசார் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO