திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மறியல் - குளிர்சாதன வசதி கொண்ட மண்டபம் கேட்ட எம்.பி

திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர்  மறியல் -  குளிர்சாதன வசதி கொண்ட  மண்டபம் கேட்ட எம்.பி

ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று  காலை(15.04.2023) கோவையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி செல்லக்கூடிய ஜன சதாப்தி ரயிலை மறித்து போராட்டம் நடைபெறும்.

 என காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மறியல் போராட்டத்திற்கு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு காலை 11:28 மணிக்கு தாமதமாக புறப்பட்ட ஜனசதாப்தி ரயிலை மறிப்பதற்காக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திருச்சி ஜங்ஷன் நுழைவாயிலுக்கு முன்னதாக 200க்கும் மேற்பட்டோர் காத்துக் கொண்டிருந்தனர்.

 காலை 11.10 மணியளவில் திருச்சி  திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்த எம்.பி திருநாவுக்கரசு ஜங்சன் ரயில் நிலையத்திற்க்கு  வருவதற்கு தாமதமானது.

ஜனசதாப்தி ரயிலும் புறப்பட்டு சென்றது. கொளுத்தும் வெயிலில் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சாலையில் காத்துக் கொண்டிருந்தனர். ஏசி காரில் வந்து இறங்கிய எம்பி அங்கிருந்த மரத்தடியில் நின்று தன்னுடைய உரையை துவக்கினார்.

அப்பொழுது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அனைவரும் இவர் மட்டும் நிழலில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார் . நாம் அனைவரும் இரண்டு மணி நேரமாக வெயிலில் காய்ந்து கொண்டிருப்பதாக முனுமுனுத்தனர். ரயில் மறியல் போராட்டம் என அறிவித்திருந்ததால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அனைவரும் எம்.பி திருநாவுக்கரசை அழைத்துக் கொண்டு ஜங்ஷன் ரயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஏற்கனவே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட தூரத்தில்  காவல்துறையினர் பாதுகாப்பு போட்டு கயிறுகளையும் தடுப்பு வேலிகளையும் அமைத்து இருந்தனர்.

அதையும் மீறி சிறு தள்ளும் முள்ளு ஏற்பட்டு சிறிது தூரம் நடந்து சென்றனர். அதற்கு மேல் காங்கிரஸ் தொண்டர்களால் வெயிலிலும் நிற்க முடியவில்லை. சிலர் காலனி அணிந்து வராததால் கொளுத்தும் வெயிலில் தரை சூடு அதிகமாக இருந்ததால் அங்கு இங்குமாக ஓடினர்.

பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைதாகி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எப்பொழுதும் போராட்டம் நடைபெற்றால் ஒரு திருமண மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபவர்களை காலையில் இருந்து மாலை வரை அடைத்து வைப்பது வழக்கம். ஆனால் எம்.பி யின் ஆதரவாளர்கள் தங்கள் எம்.பி வெயில் கொடுமை தாங்க மாட்டார் என்று கூறி காவல்துறையிடம் குளிர்சாதன அறை உள்ள திருமண மண்டபத்தை கேட்டு வாங்கி உள்ளனர்.

தற்பொழுது குளிர்சாதன  வசதி உள்ள திருமண மண்டபத்தில் காங்கிரஸ் எம்பி உள்ளிட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் முன்பு எப்படி எல்லாம் கட்சிக்காக  போராட்டம் நடத்தினோம். கடைசியில் பெயருக்கு பந்தாவுக்காக போராட்டம் நடத்தி ஏசி அறையில் அனைவரையும் அமர வைத்து இருப்பது கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.