காரில் குழந்தை கடத்தியதாக வதந்தி பரவியதால் பொதுமக்கள் பதற்றம்
வெளிமாநிலத்திலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா காரில் வைத்து கடத்திச் செல்வதாக தம்மம்பட்டி காவல் நிலையத்திலிருந்து கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.
உடனே அந்த காரை உப்பிலியபுரத்தில் போலீஸார் தடுத்த நிறுத்துவதற்கு முயற்சித்த போது அந்த கார் நிற்காமல் சென்றது. துறையூர் பாலக்கரை பகுதியில் போலீசார் பேரிகாடுகளை வைத்துக் கார் செல்லாத வண்ணம் தடுப்புகளை ஏற்படுத்தினார். இதனால் அந்தக் கார் பிடிபட்டது.
இதனைத் தொடர்ந்து காரில் குழந்தைக் கடத்தப்படுவதாக பரவிய வதந்தியால் கொந்தளித்த பொதுமக்கள் அந்தக் காரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் காரை அடித்து நொறுக்க முயன்றனர். காரில் இருந்த இரண்டு வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
பொதுமக்களிடம் இருந்து இளைஞர்களை மீட்டு காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர்கள் ஹிந்தியில் முன்னுக்கும் பின் முரணாக பதில் அளித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் யார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் ? எங்கிருந்து குட்காவை கடத்தி வருகிறார்கள் அதை எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்று முழுமையான விபரம் தெரியவில்லை.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். குழந்தை கடத்தல் வதந்தியும், குட்கா பிடிபிட்ட விவகாரமும் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision