தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டிற்கான ஸ்டார்ட்அப் மேளா -ரூ1.6 லட்சம் பரிசுகளை வென்ற மாணவர்கள்

தொழில் முனைவோர் திறன்  மேம்பாட்டிற்கான  ஸ்டார்ட்அப் மேளா -ரூ1.6 லட்சம்  பரிசுகளை வென்ற  மாணவர்கள்

தொழில் முனைவோர்களை உருவாக்கும் முயற்சியாக திருச்சி தூய வளனார் மேலாண்மை ஸ்டார்ட் அப் மேளாவை நடத்தியது. இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக முப்பத்திமூன்று குழுவினர் கலந்து கொண்டனர் 6 குழுக்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அஜித் சூர்யாஸ் மழையிலும் வெயிலிலும் இயங்கும் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற ஏர்கூலர் செய்யும் வணிக யோசனைக்கு முதல் பரிசாக ரூபாய் 50000 வழங்கப்பட்டது.

இரண்டாம் பரிசு ரூபாய் 30,000 பம்பாய்க்கு கே.ஜி சோமையா கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான. பிரத்யேக சக்கர நாற்காலிகளை தயாரிக்கும் தொழில் திட்டத்தை சமர்ப்பித்தனர். மூன்றாவது பரிசு ரூபாய் 20 ஆயிரம் கண்பார்வையற்றோருக்கான இடம் கண்டறியும் சாதாரணத்திற்காக திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தூய வளனார் மேலாண்மை மாணவர்கள் தங்கள் தொழில் யோசனைகளையும் தனித்தனியாக சமர்ப்பித்தனர் அவர்களில் சிறந்த தொழில் யோசனைக்கு ரூபாய் 25 ஆயிரம், ரூபாய் 15 ஆயிரம், ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது. பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு கைகடிகாரம் செய்யும் தொழில் யோசனைக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு, சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதினையும் ரூபாய் பத்தாயிரம் வழங்கியது.

இந்நிகழ்வில் தொப்பி வாப்பா பிரியாணி நிறுவனர் உமர் முக்தார் பிரதீப், இந்திய தொழில் கூட்டமைப்பு திருச்சி மற்றும் 60 பிளஸ் நிறுவனத்தின் தலைவர் அரசி அருள் தொடங்கிவைத்தனர். கல்லூரி அதிபர் லியோனார்ட் பெர்னான்டோ, முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர், மேலாண்மை இயக்குனர் பால்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இவ்விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களை பிறருடைய விமர்சனங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களிடம் தங்களின் வெற்றி பயணம் குறித்தும் பேசினர். நிறைவு விழாவில் மேலாண்மை மாணவர் கிஷோர் ஆண்டனி நன்றி கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO